×

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது; அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது; அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் எந்த வகையிலும் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
கிராஸ் காஸ்ட்  காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் சிவசங்கர், தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது. அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது. தனியார் பேருந்து விவகாரம் குறித்து அதிமுக ஆட்சி காலத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது. அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் எந்த வகையிலும் தனியார் பேருந்துகளை அனுமதிக்க கூடாது. கலைஞர் காலத்தில் தனியார் பேருந்துகள் அரசுடைமையான நிலையில், அதற்கு எதிராக செயல்படக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Chennai ,Anbumani Ramadoss , Don't even think about private buses in Chennai; Anbumani Ramadoss demanded that additional government buses should be run
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை...