×

புதிய மதுபான கொள்கை வழக்கு: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு..!!

டெல்லி: சிபிஐ காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20 வரை மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருந்தது. சிபிஐ கைதையடுத்து டெல்லி துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா விலகினார். தொடர்ச்சியாக சிசோடியா கடந்த மாதம் 27ம் தேதி டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அச்சமயம் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 7  நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, சிபிஐ காவல் முடிந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிசோடியா இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட மணீஷ் சிசோடியா தரப்பினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Former ,Delhi ,Deputy Chief Minister ,Manish Sisodia , New Liquor Policy, Manish Sisodia, Court Police
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...