தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மார்ச் 8,9,10 ஆகிய நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06.03.2023 மற்றும் 07.03.2023 அன்றைய தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 08.03.2023 முதல் 10.03.2022 வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: