குன்னூர் காரக்கொரை கிராமத்தில் சமையல் கேஸ் கசிவால் தீ விபத்து: காலி சிலிண்டரை மாற்றச் சென்றவர் உயிரிழப்பு

நீலகிரி: குன்னூர் அருகே காரக்கொரை கிராமத்தில் வீட்டில் கேஸ் கசிவினால் மூச்சுத்திணறி ஒருவர் உயிரிழந்தார். காரக்கொரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால், அனுஷியா தம்பதியினர் ஆவர். இன்று அப்பகுதியில் பண்டிகை காலம் என்பதால் கோபாலின் சகோதரியான கண்ணம்மா என்பவர் வெளியூரிலிருந்து காரக்கொரை கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களின் வீட்டில் கேஸ் சிலிண்டர் காலியான காரணத்தினால் அதை மாற்ற உதவிக்காக அருகில் வசிக்கக்கூடிய நடராஜ் என்பவரை அழைத்துள்ளனர். அப்போது காலியான சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

கேஸ் கசிவால் நடராஜ் மற்றும் கோபாலின் சகோதரியான கண்ணம்மா ஆகியோர்  மூச்சுத்திணறி மயக்கமடைந்து அங்கேயே விழுந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மயக்கமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் கேஸ் கசிவால் மயக்கமடைந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்ணம்மா என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரக்கொரை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: