×

மக்களுக்கு கிடைக்கின்ற எந்த சலுகையும் பாதிக்கப்படாது; பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

தனியார் பேருந்து சாதக, பாதங்களை ஆராயவே டெண்டர்:

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராய்வதற்காகவே டெண்டர் விடப்பட்டது. ஆலோசனை கூறுவதற்கான அமைப்புகளிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. சாதக, பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை அளித்த பிறகு தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். சென்னை, குமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உலக வங்கி தெரிவித்துள்ள கருத்துரை குறித்து ஆராய ஆலோசனை குழுவை தேர்ந்தெடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆலோசனை குழுவை தேர்ந்தெடுத்த பிறகு அவர்களிடம் இருந்து 3 மாதத்திற்குள் அறிக்கை பெறப்படும்.  உலக வங்கியின் அறிவுறுத்தலின்படி அரசாணை வெளியிடப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது  என்று தெரிவித்தார்.

பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை:

பெண்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு ரூ.1600 கோடி வழங்கியுள்ளது. மக்களுக்கு கிடைக்கின்ற எந்த சலுகையும் பாதிக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார். பேருந்துகளை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசுப் பேருந்துகள் எதுவும் தனியாரிடம் அளிக்கப்படமாட்டாது. எந்த வழித்தடத்தில் தேவைப்படுகிறதோ அங்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையிலேயே டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நகர பேருந்துகளில் சலுகைகள் தொடரும்:


நகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் தொடரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Shivashankar , Privilege, Bus, Private Mayam, Minister Sivashankar
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...