அருந்ததியினர் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்: சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் கைது!

சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருந்ததியின் மக்களை சீமான் இழிவாக பேசியதாகக் கூறி சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆதித்தமிழர் பேரவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

சென்னை, சின்ன போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியினர் குறித்து தவறுதலாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு கண்டனங்களும் எழுந்தது.

இந்நிலையில் சின்ன போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை கட்சியின் தலைமை அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட ஆதித் தமிழர் கட்சியினர் நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போதும் தடுப்பை மீறி அலுவகத்திற்குள் நுழைய முற்ப்பட்டனர்.

அப்போது நாம்தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், ஆதித் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பினரின் மோதலை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்து, முதற்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆதித்தமிழர்கட்சியினரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அப்பகுத்தியில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: