×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை எதிரொலி: ஏடிஎம் மையங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்.! வாணியம்பாடி அருகே போலீசார் நடவடிக்கை

வாணியம்பாடி:  திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை எதிரொலியாக வாணியம்பாடி அருகே ஏடிஎம் மையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கரை போலீசார் ஒட்டினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளை நடைபெற்றதன் எதிரொலியாக,  திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் அந்தந்த பகுதிகளை சார்ந்த போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் எண்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஏடிஎம் மையத்தின் எதிரே உள்ள கதவுகளில் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் அம்பலூர் போலீசார் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏடிஎம் அருகே சந்தேகப்படும்படியான மர்ம நபர்களோ, வழக்கத்திற்கு மாறான செயல்களும் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruvandamalai district ,Vaniyambadi , Robbery echoes in Tiruvannamalai district: awareness sticker in ATM centers.! Police action near Vaniyambadi
× RELATED மாநகராட்சியின் பல்வகை...