சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயணபிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர். 5 நீதிபதிகளுக்கும் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள எஸ்.ஸ்ரீமதி, டி. பரத சக்கரவர்த்தி, ஆர்.ஜெ.விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே இந்த 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

Related Stories: