பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து ஒளிபரப்பியதாக அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து ஒளிபரப்பியதாக அதிமுக நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளில் தண்டையார்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் எஸ்.இ.டி திரை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி சென்னை தண்டையார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக வட்ட செயலாளர் தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: