×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற மாசித்தேரோட்ட விழா

நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  பெரிய தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். சுப்பிரமணியர் சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோர் ஒரே தேரில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து மாசித்தேரோட்டத்தை கண்டுகளித்தனர்.

மாசித்தேரோட்ட விழா காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இந்த தேரோட்ட விழாவைக்கான அதிகாலை முதலே நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் குவிந்தனர். தேரோட்ட விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனமும், உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விநாயகர் தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்த பின்னர் மாசி தேரோட்டத்திற்கான பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாசித்தேரோட்டத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசித்தேரோட்ட விழா 12 நாட்கள் நடைபெற உள்ளது.


Tags : Masitherotta ceremony ,Tiruchendur Subramania Swamy Temple , Masitherotta ceremony was held at Tiruchendur Subramania Swamy Temple
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்