சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பரிந்துரைபடி 2 பேருக்கு பிரதமர் அலுவலகம் நிவாரண நிதி ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், டி.ஆர்.பாலு எம்.பிக்கு தெரிவித்துள்ள விவரத்தில், ‘பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தனலட்சுமி வாசுதேவனின் புற்றுநோய் சிகிச்சைக்கான ரூ.3 லட்சமும் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மையத்திற்கும், புகழேந்தியின் இதயநோய் சிகிச்சைக்கான தொகை ரூ.50,000, போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப்படும்.
சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்த பின்னர், இந்த உதவி தொகையானது உடனடியாக குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.