×

ஏப்ரல் முதல் பிப்ரவரி காலகட்டத்தில் பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.5,000 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில், பயணிகளின் வழியாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்: தெற்கு ரயில்வேயானது  பயணிகள் மற்றும் சரக்கு பிரிவில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில், 3 கோடியே 39 லட்சம் டன்கள், உற்பத்தி சரக்குகளை கொண்டு சேர்த்ததில் ரூ.3,230.40 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை சரக்கு ரயில் போக்குவரத்தில் ரூ.3,230.40 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. தெற்கு ரயில்வே, பயணிகளின் தோழமை மண்டலமாக செயல்பட்டு வருகிறது.

இதனிடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கையாள, முன்பதிவு செய்யப்பட்ட, முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை பண்டிகை காலங்களில் இயக்கி வருகிறது. ஏப்ரல்-பிப்ரவரி 2023-ல் (2022-23 நிதியாண்டில்) பயணிகள் போக்குவரத்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு தமது மொத்த பயனாளர்களுக்கு வழங்கிய சேவை (29.26 கோடி பயணிகள்) அளவைக் காட்டிலும் ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில் சேவையை இரட்டிப்பாக்கி, 58.26 கோடி பயணிகளுக்கான சேவையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகளின் வழியாக ரூ.5,779 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway , 5,000 crore revenue from passenger trains in April-February period: Southern Railway officials inform
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்