இருநாடுகளுக்கு இடையேயானவர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய ரூபாய்: இந்தியா-இலங்கை அரசு ஆலோசனை

கொழும்பு: இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து இந்தியா இலங்கை அரசுகள் ஆலோசனை நடத்தியதாக இந்தியா தெரிவித்தது. வரலாறு காணாத பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு இந்தியா ₹32,000 கோடி கடனுதவி அளித்தது. மேலும், சர்வதேச நிதியத்தின் கடனுதவி கிடைக்க உத்தரவாதம் அளித்து உதவியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ரைசினா மாநாட்டில் பங்கேற்ற இலங்கை நிதி அமைச்சர் அலி சாப்ரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்த போது இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கோபால் பாக்லே வெளியிட்ட அறிக்கையில், ``இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பேங்க் ஆப் சிலோன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கலந்து ஆலோசித்தனர். அப்போது, வோஸ்ட்ரோ மற்றும் நாஸ்ட்ரோ கணக்குகளின் மூலம் ரிசர்வ் வங்கி, இலங்கை மத்திய வங்கி இணைந்து உருவாக்கிய கட்டமைப்பை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: