திருப்பதி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய கார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த பக்தர்கள்  திருமலைக்கு காரில் சென்றனர். பின்னர், நேற்று ஏழுமலையானை தரிசித்து காரில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு முதலாவது மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். 4வது வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரை கடந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போக்குவரத்து போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

Related Stories: