×

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் துவக்கிவைத்தார். இந்த திட்டமானது தமிழ்நாடு அறிவிக்க கூடிய திட்டத்தை மக்களுக்கு நேரடியாக, கால தொய்வு இல்லாமல் விரைவாக கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தான் இந்த களஆய்வில் முதல்வர் திட்டம்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், கடந்த மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று தென்மாவட்டங்களான மதுரை, கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக இன்று காலை மதுரைக்கு வந்தார். காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 மாவட்ட விசாய பிரதிநிதிகள், தொழில் முனைவோர், சிறுகுறு தொழில் செய்வோர் ஆகியோரை நேரில் அழைத்துகோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து களஆய்வில் முதல்வர் நிகழ்ச்சியின் மற்றொரு நிகழ்ச்சியான சட்டம்-ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  

இந்த ஆய்வு கூட்டத்தில் தென்மண்டலங்களில் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது. அதனை மேம்படுத்த எடுக்கப்படு வேண்டிய நடவடிக்கைகள், அதில் உள்ள சிக்கல் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Madurai District Collectorate , Madurai District Collector, Law and Order, 5 District Police Officers, Chief Minister M.K.Stal's advice
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு...