பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி: பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!

மும்பை: பெண்கள் பிரிமீயர் லீக் தொடரின் 2-வது நாளான இன்று (05.03.2023) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது.

தொடரின் 2-வது நாளான இன்று (05.03.2023) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது.

நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து டெல்லி அணி முதலி பேட்டிங் ஆட உள்ளது.

Related Stories: