சென்னை: ஆன்லைன் ரம்மியில் ரூ. 17 லட்சம் பணம் இழந்ததால், நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன நபர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சுரேஷின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. உடலை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.