×

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கையில் அறிக்கை வெளியிட்டதாகவும் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் பரப்பியதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போன்றோர் சமூக வலைதள பக்கத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு பதில்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இதுபோன்ற தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை, ஏற்கனவே வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போலியான வீடியோக்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நடைபெற்றதாக தவறான வதந்தி பரப்பப்படுவதாகவும் பல்வேறு விளக்கங்களை அளித்து தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்று தவறான வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.  

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல் வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாமீட்டுள்ளனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், ஆய்வாளர் ஐயப்பன் உள்பட 7 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Annamalai , Case registered against Annamalai for publishing a defamatory report on the issue of migrant workers
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி