×

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில்வரும் வரும் பிரதோஷ நாளில் பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த பிரதோஷம் என்பது மற்ற தினங்களை விட சனி கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாக கருதப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற பிரதோஷ தினத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Shani Pratosha ,Thiruvarur Thiagarajaswamy Temple , Shani Pradosha Worship at Tiruvarur Thyagarajaswamy Temple: Crowds of Devotees See Darshan
× RELATED 14ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது...