புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் குன்னூர் ரேலியா அணை

குன்னூர்:  குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ரேலியா அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. குன்னூர் நகரின் முக்கிய குடி நீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் அணையில் காவலாளி அமைத்து கண்காணிப்பட்டு வருகிறது.

இந்த அணையை சுற்றி முட்புதர்களும், செடிகளும், காணப்பட்டு வந்தது. குன்னூர் நகராட்சி அதிகாரிகள் தற்போது 5 ஆண்டிற்கு பிறகு அணையை பொலிவு படுத்தியுள்ளனர்.  முட்புதர்கள், செடிகள் அகற்றி வர்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தற்போது இந்த அணையில் நீர் இருப்பு 41 அடி உள்ளதால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: