நிலக்கோட்டை சக்கையாநாயக்கனூரில் தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தால் இடையூறு: மாற்றி அமைக்க கோரிக்கை

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே சக்கையாநாயக்கனூரில் தெருவின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நிலக்கோட்டை அடுத்த சக்கையாநாயக்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக பின்பகுதியில் உள்ள தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு மின்கம்பம், தெருவின் நடுவே அமைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும் இக்குடியிருப்பு வழியாக செல்லும் மின்வயர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக தொங்கி செல்கிறது. இதனால் மின்சாரம் தாக்கி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தையும், தாழ்வாக செல்லும் மின்வயர்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: