சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு!

சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ‘கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட்’ என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக சென்னையில் 600க்கு மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பக ஒருநாளைக்கு 3000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாநகர போக்குவரத்து கழகம், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக தனியார் பங்களிப்புடன் மாநகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பயணிக்கும் பயணிகளின் சேவையை விரிவுபடுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் அதனடிப்படையில் இத்திட்டம் முன்னெடுத்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: