தமிழ் பால் நிறுவனத்தின் விநியோக மையம் திறப்பு

சென்னை: கொடுங்கையூர் பகுதி முத்தமிழ் நகரில் 3ம்தேதி (வெள்ளி) தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையம் திறக்கப்பட்டது. இந்த புதிய விநியோக மையத்தை தமிழ்நாடு பால் வியாபார நலச்சங்க நிறுவனர் மற்றும் தலைவர் பால்ராஜ் திறந்து வைத்தார். தமிழ் பால் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரி சிவக்குமார் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்தவர்களை பால் விநியோக மையமான ஏ.எஸ்.குளோபல் சொல்யூஷன்ஸ் விநியோகஸ்தர்களான சுரேந்தர், அப்துல் வாஜித் ஆகியோர் வரவேற்றனர்.

பால் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி சிவக்குமார் பேசுகையில், ‘‘தற்போது 80க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் 10 மாவட்டங்களில் வெற்றிகரமாக விற்பனை நடக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி விற்பனை மையத்தை கொண்டு வருவதே தமிழ் பால் நிறுவனத்தின் நோக்கம். சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் இது மாதிரியான விநியோக மையத்தை அமைத்து கொண்டுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொண்டு வாழ்வில் வளர்ச்சி பெறலாம்’’ என்றார்.

Related Stories: