×

கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை, காரைக்கால் படகுகள் விடுவிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து விசைப்படகை துப்பாக்கி முனையில் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்து விசைப்படகை கைப்பற்றியது. பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். வழக்குகளை விசாரித்த திருகோணமலை நீதிமன்றம் கடந்த 28ம் தேதி 2 விசை படைகளையும் விடுவிக்க உத்தரவிட்டது. இதையடுத்து உரிமையாளர்கள்படகுகளை தமிழகம் கொண்டு வர இலங்கை செல்ல உள்ளனர்.



Tags : Nagai , Release of Nagai, Karaikal boats captured by Navy: Sri Lanka Court orders
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு