×

கருணைப்பணி நியமனங்கள் பரம்பரை உரிமை கிடையாது: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: திருச்சியைச் சேர்ந்தவர் யோகமலர். சார்பதிவாளரான இவர் 20.7.2020ல் இறந்தார். இவரது மகன் வினோத்கண்ணா, தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து வினோத்கண்ணாவின் சகோதரி மகாலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.  இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.  அப்போது இறந்த தாயின் பணப்பலன்களை வினோத் கண்ணா பெற்றதாகவும், வீடு மற்றும் நிலங்கள் அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும், அவர் இறந்த தனது தாயை சார்ந்திருக்கவில்லை என்றும்  மகாலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், இறந்த அரசு ஊழியர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளித்திடும் வகையில் தான் கருணைப் பணி நியமனங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு போதுமான ஆவணங்களை வினோத் கண்ணா வைத்துள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கருணைப் பணி நியமனம் என்பது இறந்த அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது. இதற்கென அரசின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே கருணைப் பணி நியமனம் பெற முடியும். இதை உரிமையாக யாரும் கேட்க முடியாது. எனவே, இந்த அப்பீல் மனுவில் போதிய முகாந்திரம் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறியுள்ளனர்.

Tags : iCourt , Compassionate appointments are not hereditary rights: iCourt branch action
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு