தமிழ்நாட்டை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை:  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சேவைத் துறை, கட்டுமானம் உள்பட பல தொழிலில் பணிபுரிந்து வருகிறார்கள். வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.  அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டை சீர்குலைக்கிற எவராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: