×

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 பேர் தற்கொலை; ஆளுநர் ரவி பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44வது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18ம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

Tags : Governor ,Ravi ,Anbumani , So far 44 people have committed suicide due to online gambling; Governor Ravi should take responsibility: Anbumani condemned
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...