மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகரில் ஸ்ரீலட்சுமி நாராயண் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வளாக சுவரை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். நேற்று காலை இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோயிலின் குருக்கள் மற்றும் பக்தர்கள் இது குறித்து குயின்ஸ்லாந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காலீஸ்தான் ஆதரவாளர்கள் கோயில் சுவரை சேதப்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுவது இது நான்காவது முறையாகும். ஜனவரி 12ம் தேதி மெர்போர்னில் சுவாமி நாராயணன் கோயிலும், 16ம் தேதி விக்டோரியாவில் ஸ்ரீசிவா விஷ்ணு கோயிலும், 23ம் தேதி மெல்போர்னில் இஸ்கான் கோயிலும் காலீஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.