×

வெள்ளை மாளிகை தகவல் அதிபர் பைடன் உடலில் புற்றுநோய் திசு அகற்றம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மார்பு பகுதியில் இருந்த தோல் புற்றுநோய் திசுக்கள் முழுமையாக அகற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது பரிசோதனை முடிய நீண்ட நேரமானது. இந்நிலையில் அதிபரின் மருத்துவரான கெவின் ஓ கான்னர் கூறுகையில், ‘‘கடந்த மாதம் 16ம் தேதி அதிபரின் வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது அவரது மார்பில் இருந்த புற்றுநோய் திசுக்களால் ஏற்பட்ட புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இது மெதுவாக வளரும் புற்றுநோயாகும்.

பொதுவாக தோலின் மேற்பரப்பில் மட்டுமே இது இருக்கும். இதனை எளிதில் அகற்றி விடலாம். அறுவை சிகிச்சைக்கு பின் பிரதமரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடம் தற்போது நன்றாக குணமடைந்துள்ளது. அவர் நலமாக இருக்கிறார். மருத்துவ பரிசோதனையில் வெள்ைள மாளிகை பொறுப்புக்களை கையாளுவதற்கு ஏற்ப ஆரோக்கிம் மற்றும் சுறுசுறுப்புடனும் அதிபர் இருப்பார். வழக்கமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக தோல் பரிசோதனைகளையும் அதிபர் தொடருவார்’’ என்றார்.

Tags : White House ,President ,Biden , White House Information President Biden Removed Cancerous Tissue From Body
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை