எல்லை பதற்றங்களுக்கு இடையே ராணுவத்துக்கான நிதியை மீண்டும் அதிகரிக்கும் சீனா

பீஜிங்: சீன ராணுவத்துக்கான நிதியை மேலும் அதிகரிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனா, அமெரிக்காவை விட அதிக ராணுவ பலம் கொண்ட நாடாகவும் உள்ளது. அதேபோல், உலகிலேயே ராணுவத்துக்காக அதிக செலவுகளை செய்யும் நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2வது இடத்தில் உள்ளது. இந்திய எல்லையில் தன் ராணுவத்தை குவிக்கும் போக்கு, அமெரிக்காவை முந்த நினைக்கும் சர்வாதிகார மனப்பான்மை உள்ளிட்ட ராணுவ பதற்றங்கள் காரணமாக சீன அரசு ராணுவத்துக்கான நிதியை அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டில், ராணுவத்துக்கான நிதியை 6.8 சதவீதம் உயர்த்தி சீனா அறிவித்தது. அதன்படி 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இது கடந்த 2022ம் ஆண்டில் 7.1 சதவீதம் அதிகரித்து, 230 பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ.17.57 லட்சம் கோடி ஆகும். ஒதுக்கப்பட்டது. இது இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ராணுவத்துக்கான நிதியை மேலும் அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டம் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் ராணுவ நிதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: