×

போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான வழக்கறிஞராக சென்னை மாநகர கூடுதல் அரசு பிளீடர் நியமனம்

சென்னை: சென்னை மாநகர கூடுதல் அரசு பிளீடர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகியோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி தொடர்பான சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு பிளீடராக ஷாஜகானும் கூடுதல் அரசு பிளீடராக வீரமணியும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் ஒரு கூடுதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் டி.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல், சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் கே.ஜே.சரவணன், நந்தகோபால் ஆகியோர் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக ஆஜராகி வருகிறார்கள். இந்த நிலையில், முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Tags : Chennai City Additional Government ,Narcotics Control Unit , Appointment of Chennai City Additional Government Pleader as Advocate for Narcotics Control Unit
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்