ஹாலிவுட்டை விட தென்னிந்திய படங்கள் உயர்ந்தவை: அமைரா தஸ்தூர் பேட்டி

சென்னை: 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் அமைரா தஸ்தூர். 2015ம் ஆண்டு தனுஷ் ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்த அவர் தற்போது பிரபுதேவா ஜோடியாக ‘பஹீரா’ படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தினகரன் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு: நான் தமிழ் படங்களில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள் என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது பணத்தைப் பற்றியது அல்ல. நான்  திரைப்படங்களை விரும்புகிறேன், சக நடிகர் யார் அல்லது ஒரு பெரிய இயக்குனர் குழுவில் இருக்கிறாரா?  என்று கேட்பதில்லை. தமிழ் சினிமாவில் இருந்து நான் வெளியேறியது போல் எனக்குத் தெரியவில்லை.

எனக்கு அழுத்தமான கதையை கொண்ட நல்ல கேரக்டர்கள் வரவில்லை. அது என்னுடைய தவறாக நான் கருதவில்லை. ஒரு வெகுஜன  பொழுதுபோக்குப் படம் செய்ய விரும்பினேன். அப்போதுதான் ‘பஹீரா’ வாய்ப்பு கிடைத்தது. பிரபுதேவா நடிப்பதால் நான் படத்தை நம்பினேன். எனக்கு டார்க் காமெடி கதைகள் பிடிக்கும் அந்த விதத்திலும் பஹீரா கவர்ந்தது.

குங்பூ யோகா படத்திற்கு பிறகு ஹாலிவுட் படங்களில் நடிக்கவில்லையே என்கிறார்கள். நான் ஹாலிவுட் நடிகை அல்ல. இந்திய நடிகை அதுவும் தென்னிந்திய படங்களை விரும்புகிறவள். தமிழ், மலையாளம் கன்னட படங்களில் நடிக்க விரும்புகிறேன். இவற்றை ஹாலிவுட்டைவிட மதிக்கிறேன்.

தெற்கில் நிறைய திறமைகள் உள்ளன மற்றும் அவர்களின் கதை சொல்லும் விதம் மிகவும் வித்தியாசமானது மற்றும் வசீகரிக்கும் தன்மை கொண்டது. தென்னிந்தியத் திரைப்படங்கள் இந்தியப் பார்வையாளர்களைச் சென்றடையும் நேரம் இது. பரிசோதனை முயற்சிகள் தென்னிந்திய படங்களில் அதிகம் நடக்கிறது. இனி வரும் காலங்களில் திரைப்படங்களில் பிராந்திய எல்லைகள் மறைந்து இந்திய படங்கள் என்றே அடையாளப்படுத்தப்படும்.

நடிப்பு தவிர  உடற்பயிற்சி மற்றும் ஃபேஷனை விரும்புகிறேன். மாடலிங் பின்னணியில் இருந்து வந்த நான், எனது உடல் வகைக்கு ஏற்ப எப்படி ஆடை அணிவது மற்றும் எனக்கு எது பொருத்தமாக இருக்கும் மற்றும் எது பொருந்தாது என்பதைப் புரிந்துகொண்டேன். எனது திருமணம் பற்றி யோசிக்கவில்லை. ஒரு பெண் தன் தொழிலுக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய தலைமுறையில் நான் இருக்கிறேன். பெண்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்தும் வகையில் எல்லைகள் மற்றும் சமூகத் தடைகளை உடைத்த முன்னோடி பெண்களுக்கு நன்றி சொல்கிறேன்.

Related Stories: