இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கதி சக்தி திட்டம் உந்துகோலாக இருக்கும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கதி சக்தி திட்டம், உந்துகோலாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவே கருதப்படுகிறது. மேலும் இது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதில் ‘கதி சக்தி திட்டம்’ முக்கிய பங்கு வகிக்கும் என்று மோடி கூறினார். சாலைகள், ரயில்வே துறைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் இந்தியாவிற்கான நவீன உள்கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருகிறது.

உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு குறித்த பட்ஜெட்டுக்கு பிறகு உரையாற்றியமோடி, இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது என்றார். பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை நாங்கள் கருதுகிறோம்; இந்தப் பாதையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடையும் என்று மோடி கூறினார். இப்போது இந்த வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து, டாப் கியரில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: