×

அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினவிழா: தூத்துக்குடி அவதார பகுதியில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி: அய்யா வைகுண்டரின் 191வது அவதார திருவிழாவை ஒட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமி தொகுப்பிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம்  சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டரின் தலைமைபதி அவரது 191வது அவதார விழாவை ஒட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் கேரளா இருந்தும் ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். நாகர்கோவில் நாகராஜ திடலில் இருந்து பூஜித குரு பால ஜனாதிபதி அடிகளார் தலைமையில் அவர்கள் சுவாமி தோப்பு வரை ஊர்வலமாக சென்றனர்.

வழி நெடுகிலும் பக்தர்கள் அரோஹரா, சிவ சிவா எனக் கூறிய படி காவிக்கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அவதார தினவிழா நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பள்ளி உயர்தல் அபயம் பாடுதல் நடந்தன இதனை தொடர்ந்து அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மமும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அய்யா வழி பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை ஒட்டி கன்னியாகுமரி தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மணலி புது நகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மா பதியில் அவதார தினநாளை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வண்ணாரபேட்டை ராமநாயக்கன் தெருவில் தொடங்கி தர்மபதி வரை இரண்டு குதிரைகள் பூட்டிய அலங்கார சாரட் வண்டியில் ஆகமம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் அய்யா நாமத்தை கூறியபடி ஊர்வலமாக சென்றனர். தர்மபதியில் இன்று மாலை ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, பணிவிடை மற்றும் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Tags : Aiya Vaikundar ,Incarnate Day ,Thuthukudi Incarnate Area , Aya Vaikunderin, Incarnation Day, Special Worship
× RELATED ஜூலை 31ல் தேரோட்டம் திருச்செந்தூர்...