×

ஆழியார்-வால்பாறை சாலையில் உலா வரும் வரையாடுகள்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியிலிருந்து நீர்நிலையை தேடி, ஆழியார்-வால்பாறை சாலையில் வரையாடுகள் அதிகளவு உலாவர ஆரம்பித்துள்ளன. எனவே, வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சி ஆடுத்த ஆழியார், நவமலை, சர்க்கார்பதி வனப்பகுதியில் குரங்கு, கடமான், வரையாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதில் ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் வரையாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

 வனத்தில் இருந்து வெளியேரும் கடமான் சாலையோரம் வந்து மேய்ந்து செல்கின்றன. வால்பாறை ரோட்டில் 8 மற்றும் 9வது கொண்டை ஊசி வளைவுகளில் வரையாடுகள் சாலையை கடந்து செல்வது அதிகமாக உள்ளது. அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் அதனை பார்த்து ரசிக்கின்றனர். இதில் வனப்பகுதியில் தற்போது வறட்சி துவங்கியுள்ளதால், அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வரையாடுகள் பல, நீர்நிலைகளை தேடியும், புல் உள்ளிட்ட உணவுகளை தேடியும் உலாவருகின்றன. சில நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக வரும்போது, சாலையை கடக்கும் விலங்குகள் விபத்தில் சிக்கிகொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நீர்நிலையை தேடியும், உணவை தேடியும் இடம்பெயர்வது அதிகரித்துள்ளது.

சுற்றுலா பகுதிகளில் வனவிலங்குகளில் நடமாட்டம் தற்போது அதிகளவில் உள்ளன. இதனால் ஆழியாரில் இருந்து வால்பாறை ரோட்டில் வாகனங்களில் செல்வோர் வேகத்தை குறைக்க வேண்டும். மேலும் வாகனங்களை விட்டு இறங்கி விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு தொந்தரவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Drafts ,Aliyar-Valparai , Anaimalai: In search of water from the forest area next to Pollachi, there are many skirmishes on Aliyar-Valparai road.
× RELATED நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக...