×

சிஎஸ்கே அணியில் ஜேமிசனுக்கு பதில் ஷனாகா!

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்தார். முதலில் பேட்டிங்கில் சில தடுப்பாட்ட ஷாட்டுகளை ஆடிய டோனி, பிறகு கவர் திசையில் பந்தை அடித்து தனது பயிற்சியை தொடங்கினார். அப்போது தோனி அடித்த ஒரு ஷாட்டை பார்த்து அங்கிருந்து அனைவரும் ஒரு நொடி ஆச்சரியத்தில் நின்றனர். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் ஸ்டோக்ஸை அதிகமாக பந்து வீச பயன்படுத்த வேண்டாம் என டோனி முடிவெடுத்துள்ளார்.

இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்றுவீரரை யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. இதில் இலங்கை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஷனாகாவை பயன்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷனாகா அதிரடியாக ஆடி ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Shanaka ,Jamison ,CSK , CSK team, Jamieson, Shanaka
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி