×

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது ஜெகரண்டா மலர்கள் பூக்க துவங்கி உள்ளதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பல்வேறு சோலை மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்துக் குலுங்கும். இவை பல வண்ணங்களில் பூக்கும் நிலையில், இவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் பல்வேறு வகையான சோலை மரங்கள் பூக்கும்.

குறிப்பாக, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள், சிவப்பு நிறத்தில் சேவல் கொண்டை மலர்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. தற்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களின் நடுவே, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளன. பொதுவாக, இவை மார்ச் மாதம் இறுதி வாரத்தில் பூத்துக் குலுங்கும். இம்முறை சற்று முன்னதாக பூத்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூத்துளள இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.



Tags : Nilgiris , Ooty: Jagaranda flowers have started blooming in various parts of the Nilgiris district and tourists are enjoying it.
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...