சென்னை: தமிழ்நாட்டில் முழு பாதுகாப்புடன் இருப்பதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பேட்டியளித்துள்ளனர். சொந்த காரணங்களுக்காக ஊருக்கு செல்வதை தவறாக சித்தரித்து வதந்தி பரப்பப்படுவதாகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
