திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர் பேச்சு

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போலியான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் தொடர்பு எண் குறித்தும் விளக்கமளித்தார் . வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக வடமாநில தொழிலாளர்களை சந்தித்த பிறகு  திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Related Stories: