×

வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ₹1.58 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ₹1.58 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், கோடிப்பள்ளி ஊராட்சியில் சீலேப்பள்ளியில் குந்தாரப்பள்ளி சாலை முதல், மாதினாவூர் வரை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹58 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில், 1,730 மீட்டர் தூரத்திற்கு தார்சாலை, மழைநீர் வடிகால், கல்வெட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. சீலேப்பள்ளி கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹5 லட்சத்து 14 ஆயரிம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

மேலும், ₹5 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதியதாக இருப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாடுவானப்பள்ளி, ராமச்சந்திரம் ஊராட்சியில் ₹6.66 லட்சம் மதிப்பில் பள்ளி சீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 5 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணிகள், மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சாய்வுதளம் நீட்டிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.

சிகரமாகனப்பள்ளி கிராமத்தில் ₹4.80 லட்சம் மதிப்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், பூங்கொடி, லட்சுமியம்மா ஆகியோர் புதியதாக வீடுகள் கட்டி வருகின்றனர். கே. கொத்தூர் கிராமத்தில் 24 பழங்குடியின மக்களுக்கு தலா ₹3 லட்சம் மதிப்பில் ₹78 லட்சம் மதிப்பில் குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ₹1 கோடியே 58 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தார்சாலை அமைக்கும் இடத்தில், தார் கலவை அளவினை ஆய்வு செயதார். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டவர், குடிநீர் வினியோகம் குறித்து ெபாது மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டவர், குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவு, குழந்தைகள் எடை, உயரம் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து குறித்து, அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அங்கன்வாடி மையத்தை தூய்மையாக பராமரிக்கவும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். ெதாடர்ந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை பார்வையிட்ட கலெக்டர், பள்ளி மாணவர்களிடம் கணிதம், ஆங்கிலம் பாடங்கள் குறித்த கற்றல் திறனை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பள்ளியை புதுப்பிக்கும் பணியினை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

புதியதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் இரு பயனாளிகளின் வீடுகளுக்கு, மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். 24 பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் குந்தாரப்பள்ளி ஊராட்சி ராமாபுரம் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியை பார்வையிட்டவர், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பினை பதிவேடுகள் மற்றும் மின்னனு இயந்திரத்தில் பதியப்பட்டுள்ள அளவீடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் கடை சரியான நேரத்திற்கு திறக்கப்படுகிறதா, பொருட்கள் சரியான அளவீடுகளில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்ரிநாத், சீனிவாசமூர்த்தி, பொறியாளர்கள் குமார், தீபமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி, கூட்டுறவு சரக பதிவாளர் சிவலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர்கள் மூர்த்தி, மாதன், ஊராட்சி மன்ற தலைவர் தில்லையரசி சரவணகுமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : Veppanahalli ,Panchayat Union , Krishnagiri: In Veppanahalli Panchayat Union of Krishnagiri district, development projects worth ₹1.58 crore are underway by the Department of Rural Development.
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு