சென்னை: சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தனியார் அமைப்பு இயக்குனர் ராஜு ஹரீஷ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கல்வி உதவி, மனித உரிமை விழிப்புணர்வு, கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். துறையில் சிறந்து விளங்கியவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது என ராஜு ஹரீஷ் தெரிவித்தார்.
