வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து ஆலோசனை நடைபெற உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அலோக்குமார், பாலமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். இன்று மாலை சென்னை வரும் பீகார் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர், தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து நேற்று பீகார் சட்டசபையில், பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அம்மாநில துணை முதல்வர் இது போலியான தகவல் என்றும் அப்படி ஏதும் இருந்தால் தமிழ்நாடு அரசும் மற்றும் பீகார் அரசும் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று மாலை சென்னை  வரும் அனைத்துக்கட்சி குழு, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளது. 

Related Stories: