×

கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது..!!

பெங்களூரு: கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் சித்தராமையாவை போலீஸ் தடுத்து நிறுத்தியது. மகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. மாதல்விருபக்ஷாவை கைது செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியினருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சித்தராமையாவை போலீஸ் அழைத்துச் சென்றது.

Tags : Former ,Chief Minister ,Siddaramaiah ,Karnataka government , Karnataka Government, protest, Siddaramaiah, arrested
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்