புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் மரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இணையத்தில் பிரபலமான ‘What Karwad உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்படக் கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே சாலை விபத்தில் காலமானார். பிரபல புகைப்பட கலைஞரான ஸ்டாலின் ஜேக்கப், கடந்த  காலங்களில் எடுத்த புகைப்படங்கள்  மாநிலத்தையே அதிர வைப்பதாக இருந்தது.

இவர் புகைப்படக் கலைஞர் மட்டுமின்றி ஆன்லைனில் பிரபலமான what a karwad என்ற உணவு நிறுவனத்தையும் நடத்திவந்தவர். நேற்று ஸ்டாலின் ஜேக்கப் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில்தான் விபத்தில் சிக்கி அவர்  காலமாகியுள்ளார். செங்கல்பட்டு அடுத்த மறைமலைநக அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலின் ஜேக்கப், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். ஸ்டாலினுடன் பயணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்துள்ளார். புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து நிலையில், அவரது  மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: