×

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவான காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொண்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், புரதச்சத்து, மாவுச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் கே, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

மருத்துவப் பயன்கள்

*உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்றுப்புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது. உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ½ கப் அளவு காராமணியில் ஒரு கிராம் கொழுப்பு உள்ளது.

*காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாக சுரக்க வைக்கும். இந்த இயக்கு நீர் ரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு ‘சாப்பிட்டது போதும்’ என்ற சமிக்ஞையை தரும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

*ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்று நோய் செல்களை அழித்துவிடும்.

*சிறுநீரக பிரச்னை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம். இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும். இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசை சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும். மேலும் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தொகுப்பு - மாலா பழனிராஜ், சென்னை.

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்