தென்னிந்திய படமும் இந்திய சினிமாதான்: ரகுல் பிரீத் சிங்

சென்னை: தமிழில் இந்தியன் 2வில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தை அவர் முடித்துவிட்டார். நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடம் அவர் நடித்து 5 இந்தி படங்கள் வெளியானது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைப்படங்கள் இந்தி சேனல்களில் எப்போதும் கொண்டாடப்பட்டே வந்திருக்கின்றன. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஓடிடி மூலமாக அந்த படங்களை மக்கள் அதிகமாக பார்க்கத் தொடங்கினர். தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் பேசப்பட இதுவே காரணம்.

தென்னிந்திய மற்றும் இந்தி படங்கள் இரண்டுமே இந்திய சினிமாதுறையின் ஒரு பகுதிதான். இரண்டையும் ஒப்பிடத் தேவையில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால், அதுவே பார்வையாளர்களைக் கண்டுபிடிக்கும். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அதனால் விவாதங்கள் நடக்கின்றன. நம்மிடம் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். கலைஞர்கள் இருக்கிறார்கள். நல்ல கதைகள் இருக்கின்றன. அந்த திறமைகளைப் பயன்படுத்தி அற்புதமான சர்வதேசத் திரைப்படத்தை உருவாக்க முடியும். இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

Related Stories: