டெல்லியை விட ஆளுநர் மாளிகை அருகில் உள்ளது: தமிழிசை டிவிட்

ஐதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாக தலைமைச் செயலாளர் மூலமாக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், ‘‘டெல்லியை விட ஆளுநர் மாளிகை மிக அருகில் உள்ளது.

தலைமை செயலாளராகிய உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு வர நேரம் இல்லை. நெறிமுறை இல்லை. மரியாதை நிமித்தமாக சந்திக்கும் மரியாதை கூட இல்லை. நட்பு ரீதியான வருகைகள், உரையாடல்கள் அதிக உதவியாக இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் நீங்கள் விரும்பவில்லை’’ என கூறி உள்ளார்.

Related Stories: