×

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி

சியோல்: வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து தங்களது ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தி வருகின்றன.  இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த பயிற்சியை போர் ஒத்திகையாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் வடகொரியா எச்சரித்தது.

இந்நிலையில் அமெரிக்கா தென்கொரியா இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இருநாடுகளின் ராணுவ அதிகாரிகளும் கூட்டாக இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ‘‘வருகின்ற 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை இருநாடுகளின் ராணுவமும் இணைந்து கூட்டுப்பயிற்சியை மேற்கொள்ள உள்ளன. வடகொரியாவின் ஆக்கிரமிப்பு, சமீபத்திய மோதல்களில் இருந்து கற்றுக்கொண்டவை மற்றும் மாறிவரும் பாதுகாப்பு சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிற்சியில் கவனம் செலுத்தப்படும்” என்றனர்.


Tags : South Korea ,US ,North Korea , South Korea-US joint military drills despite North Korea's warning
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...