×

திமுக ஐடி பிரிவால் தொடங்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பிரசாரத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு: 21,67,411 பேர் வாழ்த்து

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவால் தொடங்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பிரசாரம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போன்-எ-விஷ் மூலம் 21,67,411 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் வாய்ஸ் கால் அழைப்பின் மூலம் அவர் நன்றி தெரிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவால் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபோன்-எ-விஷ்  மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம். மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் செல்பி வித் சி.எம் எனும் பிரசாரத்தில் செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த 2 பிரசாரங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 28ம் தேதி சென்னையில் நடந்த flash mob என்னும் நிகழ்வில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு பல புதுமையான பிரசாரங்களை கண்டுகளித்தார், அவை அமோக வெற்றியை பெற்றுள்ளன. முதல்வருக்கான ஃபோன்-எ-விஷ் மூலம் 21,67,411 பேர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிற்குள் இருந்து மட்டுமின்றி உலகமெங்கிலும் உள்ள நலம் விரும்பிகளிடமிருந்தும் அழைப்புகள் வந்து உள்ளன. மெய்நிகர் தொழில்நுட்பம்  மூலம் 16,75,484 பேர் முதல்வருடன் செல்பி எடுத்து தங்களது சமூக ஊடகங்களில் பதிவிட்டு உள்ளனர்.

முதல்வருக்கு ஃபோன்-எ-விஷ் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைத்து அழைப்பாளர்களுக்கும் வாய்ஸ் கால் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “வணக்கம்... உங்களின் ஒருவரான மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். எனது பிறந்தநாளுக்கு நீங்கள் சொன்ன வாழ்த்து எனக்கு வந்து சேர்ந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களை மாதிரியே உலகம் முழுவதும் இருந்து வந்த லட்சக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகளோட அன்பான வாழ்த்துகள் என்னை நெகிழ வைத்திருக்கிறது. உங்கள் ஒவ்வொருத்தருக்கும் என் அன்பான நன்றி. இந்த வேளையில் உங்கள் அனைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி. வணக்கம்” என்று கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK IT , Public response to Chief Minister M.K.Stal's birthday campaign launched by DMK IT wing: 21,67,411 people wished
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...