இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு துவண்டு விடாதீர்கள் கவலைப்படாதீர்கள்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். தேமுதிகவுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். மேலும், இடைத்தேர்தலில் இரவு, பகல் என பாராமல் உழைத்த தேமுதிக நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு தேமுதிக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: